அப்பொல்லோ மருத்துவமனை நிறுவனத்துடன் (லிமிற்றட்) கூட்டுப்பங்காளியாக உள்ள மைக்ரோ ஜீனோமிக்ஸ் இந்தியா நிறுவனமானது கிறீடென்ஸ் ஜீனோமிக்ஸ் நிறுவனத்தினுடைய துணை நிறுவனமாகும். இந்நிறுவனமானது இந்தியாவிலுள்ள மருத்துவ நோயறிதலின் அடிப்படையில் DNA இற்கான ஒரு புரட்சிகரமான புதிய அணுகுமுறையை வழங்குவதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. மைக்ரோ ஜீனோமிக்ஸ் நிறுவனமானது நவீன தொழில்நுட்ப உபகரணங்களுடனும் கைதேர்ந்த ஊழியர்களுடனும் துல்லியமான மற்றும்; வினைத்திறனான நோய் ஆராய்ந்தறிதல் முடிவுகளை வழங்குதலை உறுதிப்படுத்துகிறது. புகழ்பெற்ற கிறீடென்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராக, இந்நிறுவனமானது தன்னுடைய உயர்தர சேவைகளுடன் உத்தரவாதம் சேர்க்கப்பட்ட நம்பிக்கையையும் வழங்குகிறது.
மருத்துவ நோயறிதல்
உயர்தர சேவைகளை வழங்குவதற்காக அனுபவமுள்ள விஞ்ஞானிகளுடனும், மரபணு ஆலோசகர்களுடனும், நாங்கள் மரபணுவில் மரபுவழியாகப் பெறப்பட்ட நோய்களைக் கண்டறிதலில் தொழில்துறை முன்னோடியாக உள்ளோம்.
ngs
உடல் ரீதியான சீர்குலைவுகள் (மூல உயிர் வழி மாறுபாடுகள்) மற்றும் புற்றுநோய் நோயறிதல் (உடல் கூறு சார்ந்த மாறுபாடுகள்) என்பவற்றின் விரிவான நிரந்தர மாற்ற பகுப்பாய்விற்கான சிறந்ததொரு தளத்தை NGS வழங்குகிறது. இந்த முன்னோடி தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியுடன்> மருத்துவ ஆய்வகங்கள்> பல்வேறு சிக்கலான மரபுவழியாகப் பெறப்பட்ட நோய்களுக்காக விரிவான மரபணு குழுக்களை இலகுபடுத்தி தரக்கூடியதாக உள்ளன.






