மைக்ரோ ஜீனோமிக்ஸ் ஆனது மருத்துவத்துறையிலுள்ள இரண்டு முன்னணி நிறுவனங்களின் ஒரு கூட்டுமுயற்சியாகும். புதுமையான அதிநவீன தொழில்நுட்பத்தினூடாக நோயறிதலில் மிகச் சிறந்ததை வழங்குவதற்கான அதன் குறிக்கோளானது அதனுடைய பெற்றோர் நிறுவனங்களான கிறீடென்ஸ் ஜீனோமிக்ஸ் மற்றும் அப்பொல்லோ வைத்தியசாலையினால் வழங்கப்படும் உறுதியான அடித்தளத்தினால் ஊக்குவிக்கப்படுகின்றன.
கிறீடென்ஸ் ஜீனோமிக்ஸ் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு நிகழ் நேர மரபணு தொகையியல் ஆய்வை வழங்குகிறது. அதனுடைய பங்காளி முதலீட்டாளர்கள் இந்தியாவின் மருத்துவ சேவை துறையிலுள்ள முன்னோடிகளை உள்ளடக்குகிறது. ஆரம்ப நோயறிதலையும் நோயின் சிகிச்சையையும் செயல்படுத்தும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு தளமாக மூலக்கூறு உயிரியல்> மரபணுக்கள் மற்றும் மரபணு தொகையியல் என்பவற்றில் புதுமையை நோக்கி அர்ப்பணிப்புள்ள ஒரு தர அடையாளம் ஆகும். இந் நிறுவனமானது தொற்று நோய்கள்> மரபுரிமையாகப் பெறப்பட்ட நோய்கள்> நோய்க்கட்டிகள் பற்றிய ஆய்வில் புதிய நோயறிதல்கள் என்பவற்றின் அடையாளத்துடன் புற்றுநோய்களுக்;கான தனிப்பட்ட சிகிச்சையுடன் கருவுறாமை/மலட்டுத்தன்மை சார்பான துறையிலும் தலைமை வகிக்கிறது.
இரண்டாவது பங்குதாரரான அப்பொல்லோ மருத்துவமனை நிறுவனம் லிமிற்றட் (AHEL) ஆனது 1983ஆம் ஆண்டு இந்தியாவின் முதலாவது இணைக்கப்பட்ட மருத்துவமனை கூட்டுமுயற்சியாக நிறுவப்பட்டது. அது தற்போது இந்தியாவில் மிகப்பெரிய இருதய பயிற்சிக்கான மருத்துவமனையாகவும்> உலகின் மிகப் பெரிய தனிப்பட்ட புற்றுநோய் பராமரிப்பாளர்களில் ஒன்றாகவும் அத்தோடு உலகின் தலைமைவகிக்கும் திடமான உறுப்பு மாற்றுத் திட்டமாகவும் உள்ளது. இந்தியாவின் அரசாங்கமும் நாட்டிற்கும் அதனுடைய மக்களுக்குமான அதன் பங்களிப்பிற்காக நினைவு முத்திரை ஒன்றுடன் மருத்துவமனையை அடையாளப்படுத்தியுள்ளது.


