அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள

எவ்வாறு இந்த நோய் கண்டறிதல் செயல்படுத்தப்படுகிறது?

மருத்துவ மாதிரிகளில் உள்ள நுண்ணங்கிகளான பக்றீரியா மற்றும் பங்கசுக்களை இனங்காண 16S rRNA மற்றும் ITS1 மரபணு பகுதி பயன்படுத்துகின்றன. பலமடங்காகப் பெருக்கப்பட்ட மரபணு பகுதியானது Ion S5 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றின் நவீன வரிசைப்படுத்தல் முறை மூலம் நோய் இனங்காணப்படுகிறது.

எந்த வகை மாதிரிகள் பரிசோதனைக் குட்படுத்தப்பட முடியும்?

  • பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் மாதிரிகளான> இரத்தம்> சிறுநீர்> உமிழ்நீர்/எச்சில்> சளி> சீழ்> விந்து> யோனி சுரப்புகள்> cerebrospinal – செரிப்ரோஸ்பைனல் (மூளை முதுகுத்தண்டு தொடர்பான) திரவம்> ஊசி திசுப் பரிசோதனை மாதிரிகள்.
  • ஸ்வொப்ஸ் (Swabs) (பிறப்புறுப்பு பாதை> மூக்கு> கண்கள்> காதுகள் மற்றும் ஆழமற்ற காயங்கள்)
  • திசுப் பரிசோதனை மாதிரிகள் (மார்பகம்> கல்லீரல் மற்றும் தோல்)
  • பிரித்தெடுக்கப்படும் DNA

RID, BactFast மற்றும் FungiFast எவ்வாறு மற்றைய நடைமுறையிலுள்ள சோதனைகளை விட வேறுபடுகிறது?

  • நியாயமான விலையில் தரமான முன்னோடி பரிசோதன
  • மிகவும் துல்லியமான முடிவுகள
  • எந்த மருத்துவ மாதிரிகளும் பயன்படுத்தப்பட முடியும்.
  • பல வகையான நுண்ணங்கிகளைக் கண்டு பிடிக்க முடியும்.
  • இனம் மற்றும் அதன் உப பிரிவுகளைக் கண்டு பிடிக்க முடியும்.
  • கலப்பு நோய்த்தொற்றுக்களைக் கண்டு பிடிக்க முடியும்.

முடிவுகளை அறிந்து கொள்ள எடுக்கும் கால அவகாசம் என்ன?

முடிவுகள் 36 மணித்தியாலங்களுக்கும் வழங்கப்படும்.