இந்த சோதனையானது மருத்துவ மற்றும் தொழில்துறை சார்ந்த மாதிரிகளில் இருக்கும் அறியப்பட்ட பக்ரீரியாக்களைக் கண்டறிவதற்காகத் தேர்ச்சி பெற்றுள்ளது. பக்ரீரியாவின் ஒவ்வொரு இனத்தினதும் விகிதத்தைக் குறித்த தகவலை அது வழங்குகிறது. அதன் 36 மணித்தியால நேர இடைவெளியில், அத்தோடு தெளிவாகத் தெரியும் அணுமுறையுடன், மாதிரி சோதனையின் பக்ரீயாவின் கண்டறிதல் ஒழுங்குமுறைகளுக்கு மேலும் வினைத்திறனுள்ள அத்தோடு துல்லியமான முடிவை அது வழங்குகிறது.
தீவிர சிகிச்சையின் கீழ் இருக்கும் நோயாளர்களில் பக்ரீரியா தொற்றுக்களின் பல்வேறு கண்டறிதல்களுக்காக BactFast தற்போது மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. அதன் குறிப்பிட்ட பயன்பாடுகள் உள்ளடக்குபவை காசநோய், மூளைக்காய்ச்சல், சல்மோனல்லா (Salmonella), கக்குவான் இருமல், வாந்திபேதி, சளிக்காய்ச்சல், MRSA (மெதிசலின்) (methicillin) எதிர்ப்பு ஸ்டாஃபிலோகோகஸ் ஓரியஸ் (Staphylococcus aureus)> ஃடைஃபொய்ட் – கபவாத ஜூரம், சுவாசக்கருவி தொடர்பான நிமோனியா (VAP) மத்திய கோடு தொடர்பான இரத்த ஓட்ட தொற்றுக்கள் (CLABSI), சிறுநீர் நீக்கக்குழாய் தொடர்பான சிறுநீர்ப் பாதை தொற்றுக்கள் (UTI), நீரிழிவு புண்கள் அத்தோடு அறியப்படாத நோயின் காரணம் பற்றிய ஆய்வுடன் கலப்பு தொற்றுக்கள் என்பவற்றால் நோய் அறியப்பட்ட நோயாளர்களில் உள்ள பக்ரீரியா தொற்றுக்களின் அடையாளம் ஆகும்.
சோதனையின் மிகச் சிறப்பான அம்சம் என்னவென்றால் விரைவான அடையாளம் அத்தோடு விரைவான பெறுபேறுகளுடன் உதவும் அதிக அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் நுண்ணங்கி வளர்ப்பு அடிப்படையிலான கண்டறிதலுக்குப் பதிலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நுண்ணங்கி வளர்ப்பு சோதனையானது தொற்றுக்கள் தீவிரமடைவதன் வாய்ப்புக்களைக் குறைத்து பூரண குணமடைதலுக்கான மிகச்சிறந்த வாய்ப்பை நோயாளர்களுக்குத் தருகிறது. மேலதிகமாக, சரியான நேரத்திற்கேற்ற முறையிலான தொற்றுக்களின் ஒழுங்கான நோயறிதல், நோயாளர்களின் ஆரோக்கியத்தை மேலும் பாதிக்கும் தேவையற்ற மருந்துகளை அவர்கள் பெறாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது.
அத்தோடு மாதிரி பெறப்பட்டு 36 மணித்தியாலங்களுக்குள் சோதனை முடிவுகள் வழங்கப்பட முடியும்.
பக்ரியா தொற்றுக்களின் நோயறிதலுக்கான நம்பகமான தீர்வு BactFast ஆகும், அதற்கு காரணம் பின்வருவனவற்றிற்கான அதன் ஆற்றல் ஆகும்.
- நுண்ணங்கி வளர்ப்பு முறை மூலம் இனங்காண முடியாத இனங்களையும் இம்முறையின் தனித்தன்மை மூலம் அடையாளங் காண முடியும்.
- அறியப்பட்ட பக்ரீரியாக்களின் நிரலையும் அடையாளங் காண முடியும்.
- குறைந்த மணிநேர இடைவெளியில் முடிவுகளை வழங்க முடியும்.
- 92% துல்லியத்தன்மை மற்றும் உணர்திறன.
- தொடர்புடைய அத்தோடு ஒப்பிடக்கூடிய ஆய்வின் இருப்பு.
BactFast சோதனையானது மூன்று கட்டங்களை வழங்குகிறது, அது உடலானது பக்ரீயா தொற்றுக்களை இன்னும் துல்லியமாகப் புரிந்து, பொருத்தமான நோய்க்காரணியைத் தீர்மானிப்பதற்கு உதவுகிறது.
- இனங்காணும் படிமுறையானது ஃபிலோஜெனட்டிக் முறை மூலம் அடையாளங் காணப்பட்ட உயிரினத்தின் அனுசேபம் மற்றும் பொறிமுறைத் தொழிற்பாடுகளை கண்டறிய பயன்படுத்துகிறது.
- பக்ரீரியாவின் ஒவ்வொரு இனத்தினதும் விகித அளவின் அடையாளத்தைக் கண்டு கொள்ளவும் சோதனையானது இடங்கொடுக்கிறது, அது இந்த துறைக்கு முற்றிலும் பூரணமான அறிமுகமாகும்.
- மாதிரியின் ஒப்பீட்டு ஆய்வானது வெவ்வேறு சிகிச்சைகளின் செயல்திறனின் முன் பாவனையை எளிதாக்கும் குறிப்பிட்ட சூழல் மற்றும் சிகிச்சை நிலைமைகளின் கீழ் பக்ரீரியாவின் மிகுதியைப் புரிந்து கொள்வதற்கு மருத்துவர்களுக்கு இடங்கொடுக்கிறது.
BactFast சோதனையானது எளிமையான பணிப்பாய்வைப் பின்பற்றுகிறது, அது சோதனை மாதிரியிலிருந்து DNA பிரித்தெடுத்தலை (இரத்தம்/FFPE/திசு), 16S பகுதிக்கு குறிப்பிட்ட கலங்களுடன் DNA பெருக்கம், Library preparation, Template preparation, Sequencing, தகவல் ஆய்வு மற்றும் அறிக்கை செய்தல் என்பவற்றை உள்ளடக்குகிறது.
மரபுரீதியான பக்ரீரியா சோதனையானது அறியப்பட்ட எல்லா பக்ரீரியா உயிரினங்களையும் கண்டுகொள்வதற்கு 3 நாட்களிலிருந்து 3 வாரங்கள் வரை எடுக்கிறது. இப்போதிருக்கும் தொழில்நுட்பங்களோடு ஒப்பிடும்போது இம்முறை குறைவான மனித தலையீட்டைக் கொண்டுள்ளது அதனால் தவறு விகிதங்கள் குறைக்கப்படுகின்றன.


