FungiFast

இந்த விரைவான சோதனை ஒழுங்குமுறையானது மருத்துவ மாதிரிகளில் பங்கசு தொற்றுக்களை அடையாளங் காணுவதை நோக்கித் தனிப்பயனாக்கப்பட்டுள்ளது. இருக்கும் தெரிந்த பங்கசின் நிரலைக் கண்டு பிடித்து விவரிக்கக்கூடிய அதன் ஆற்றலானது உயர் நம்பகமான சோதனை செயல்முறையைச் செய்கிறது. பங்கசின் வளமையுடன் சேர்த்தியாக> FungiFast வழங்கப்பட்ட மாதிரியில் ஒவ்வொரு பங்கசு இனத்தின் விகித அளவின் தகவல்களையும் தருகிறது. மாதிரி ஆய்வுகூடத்தில் கொடுக்கப்பட்ட 36 மணித்தியாலங்களுக்குள் இந்த எல்லா ஆய்வும் வழங்கப்படுகிறது.

FungiFast சோதனையானது மேலோட்டமான, தோலுக்கு அடியிலான, அத்தோடு முறையான பங்கசு தொற்றுக்களின் கண்டறிதலுக்காகத் தற்போது பயன்படுத்தப்படுகிறது. அஸ்பெர்ஜிலோசிஸ் (Aspergillosis) – ஒருவகைக்காளான் நோய், பூஞ்சண நோய், பங்கசு கண்தொற்று, படர்தாமரை, நியோஃபோர்மன்ஸ் (Neoformans), நோய் எதிர்ப்புத்திறன் பாதிக்கப்பட்டவர்களில் சந்தர்ப்ப பங்கசு தொற்றுக்கள், மாற்று அல்லது வாய் மூலமன்றி வேறுவழியாக உணவு கொடுக்கப்படுகிற நோயாளர்களில் அல்லது கோடிகோஸ்ட்ரொய்ட் (corticosteroid) சிகிச்சையில் அல்லது கனமான அன்டிபயோடிக் சிகிச்சையிலுள்ள தனிப்பட்ட நபர்களைக் கண்டு பிடிப்பதிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

அத்தோடு மாதிரி பெறப்பட்டு 36 மணித்தியாலங்களுக்குள் சோதனை முடிவுகள் வழங்கப்பட முடியும்.

பங்கசு தொற்றுக்களின் நோயறிதலுக்கான நம்பகமான தீர்வு FungiFast ஆகும்> அதற்கு காரணம் பின்வருவனவற்றிற்கான அதன் ஆற்றல் ஆகும்.

  • நுண்ணங்கி வளர்ப்பு முறை மூலம் இனங்காண முடியாத இனங்களையும் இம்முறையின் தனித்தன்மை மூலம் அடையாளங் காண முடியும்.
  • அறியப்பட்ட பக்ரீரியாக்களின் நிரலையும் அடையாளங் காண முடியும்.
  • குறைந்த மணிநேர இடைவெளியில் முடிவுகளை வழங்க முடியும்.
  • 92% துல்லியத்தன்மை மற்றும் உணர்திறன்
  • பங்கசு DNA இன் இணை வரிசைப்படுத்தலின் பயன்பாட்டுடன் ஆய்வின் பல்வேறு நிலைகளின் இருப்பு.

 

FungiFast சோதனையானது எளிமையான பணிப்பாய்வைப் பின்பற்றுகிறது, அது சோதனை மாதிரியிலிருந்து DNA பிரித்தெடுத்தலை (இரத்தம்/FFPE/திசு), 16S பகுதிக்கு குறிப்பிட்ட கலங்களுடன் DNA பெருக்கம், Library preparation, Template preparation, Sequencing, தகவல் ஆய்வு மற்றும் அறிக்கை செய்தல் என்பவற்றை உள்ளடக்குகிறது.

வழமையான பங்கசு சோதனையானது அறியப்பட்ட எல்லா பங்கசு உயிரினங்களையும் கண்டுகொள்வதற்கு 7 நாட்களிலிருந்து 3 வாரங்கள் வரை எடுக்கும். இப்போதிருக்கும் தொழில்நுட்பங்களோடு ஒப்பிடும்போது இம்முறை குறைவான மனித தலையீட்டைக் கொண்டுள்ளது அதனால் தவறு விகிதங்கள் குறைக்கப்படுகின்றன.

உயிரினங்கள் அவற்றின் தனித்துவமான DNA பகுதிகளினால் அடையாளங் காணப்படுகின்றன> அது நகலெடுக்கப்படவோ அல்லது தவறாகப் பொருள் விளங்கிக்கொள்ளப்படவோ முடியாது. FungiFast ஆனது 92% துல்லியத்தன்மையைக் கொண்டுள்ளது;

பங்கசின் வளமையுடன் சேர்த்தியாக> வழங்கப்பட்ட மாதிரியில் ஒவ்வொரு பங்கசு இனத்தின் விகித அளவின் தகவல்களையம் FungiFast தருகிறது. மாதிரி ஆய்வுகூடத்தில் கொடுக்கப்பட்ட 36 மணித்தியாலங்களுக்குள் விரிவாக வழங்கப்படுகிறது.